பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக இந்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் புது டெல்லியில் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று 17வது நாளை எட்டியுள்ளது.
கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,கொக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக சோனம் வாங்சுக் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
2026 ஜூன் 28ஆம் திகதியன்று இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் வாங்சுக் கடும் உடல் சோர்வடைந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அவர் தனது உடல் எடையில் 8.5 கிலோவை இழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், உணவுத்தவிர்ப்பு போராட்டத்தைக் கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, 30 வயதான அபிஜீத் திப்கே என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கொக்ரோச் என்ற இளைஞர் அமைப்பு, சமூக ஊடகங்கள் மூலம் குறுகிய காலத்தில் 22 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளது.
இது இளைஞர்களின் வேலையின்மை மற்றும் பரீட்சை முறைகேடுகள் மீதான ஆத்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு தளமாக உருவெடுத்துள்ளது.
இந்தநிலையில் ஜூலை 20ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பரீட்சை வினாத்தாள் கசிவு காரணமாக மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு பின்னர் நடத்தப்பட்டன.
இது இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சகமோ அல்லது அரச தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சகமோ அல்லது அரச தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை.
இதேவேளை இந்த உணவுத்தவிர்ப்பு போராட்டம், ,இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் ஒரு எதிர்பார்க்காத எதிர்ப்பாகக் கருதப்படுகின்றது.
Latest News
2026 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் குறித்து AI மாதிரிகளின் முக்கிய பதிவு!
Local
14 July 2026
ஈரான் தவிர ஏனைய நாடுகளின் போக்குவரத்துக்கு ஹோர்முஸ் நீரிணை திறப்பு: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
Local
14 July 2026
ஹோர்முஸ் நீரிணைக்கான 20% கட்டணம் ரத்து: வர்த்தக ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை - ட்ரம்ப் அறிவிப்பு
Local
14 July 2026
இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை
Local
14 July 2026
பரீட்சை வினாத்தாள் கசிவு - 17நாளாக தொடரும் உணவுத் தவிர்ப்பு போராட்டம்
Local
14 July 2026
OCI விசா கட்டணத்தைக் குறைக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை!
Local
14 July 2026
இந்திய அணிக்கு 259 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
14 July 2026
சமூக வலைதளங்களில் போலி கணக்குகள்: நடிகை பாவனா எச்சரிக்கை
Local
14 July 2026
ஆளில்லா வானூர்தி போக்குவரத்து திட்டம் விரைவில் ஆரம்பம்.....
Local
14 July 2026
ஜனநாயகன் வருகைக்கு தயாராகும் ரசிகர்கள் - நாளை காத்திருக்கும் நல்ல செய்தி
Local
14 July 2026