General14 July 2026

ஈரான் தவிர ஏனைய நாடுகளின் போக்குவரத்துக்கு ஹோர்முஸ் நீரிணை திறப்பு: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதன்படி, ஹோர்முஸ் நீரிணையானது, ஈரான் தவிர்ந்த ஏனைய நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு முற்றாகத் திறந்திருக்கும் என ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைமையின் "பொய், வன்முறை மற்றும் தீய செயல்களே" அந்த நாட்டுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்றும், இது ஈரானை "முழுமையான அழிவை நோக்கி" இட்டுச் செல்லும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடையானது ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்கள் மற்றும் ஈரானிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த அனைத்து கப்பல்களுக்கும் "முழுமையான முற்றுகை" விதிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes