International18 July 2026

விடுதியில் மாணவர்களின் அவலம் - முதல்வர் விஜய்யின் ஆய்வில் வெடித்த மாணவர்களின் முறைப்பாடுகள்

சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, விடுதியில் தங்கியுள்ள மாணவர் ஒருவர், அங்கு நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான பல்வேறு குறைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் திருப்திகரமாக இல்லை என்றும், இது தொடர்பாக பலமுறை முறைப்பாடு அளித்தும் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இரவு நேரத்தில் பகுதி நேர வேலை அல்லது போட்டித் தேர்வு பயிற்சியிலிருந்து திரும்பும் மாணவர்கள், விடுதி வாயில் மூடப்பட்டிருப்பதால் வெளியே தங்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும், இதனால் பாதுகாப்பு சிக்கல்கள் உருவாகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், விடுதியில் கண்காணிப்பு கேமராக்கள் போதுமான அளவில் இல்லை, கழிப்பறைகள் சேதமடைந்தும் சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளன, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நுளம்புத் தொல்லை நிலவுகிறது என்றும் மாணவர் சுட்டிக்காட்டினார்.

கரப்பந்தாட்ட மைதானம் தயாராக இருந்தபோதிலும் அதை பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை என்றும், விடுதி நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.

மாணவரின் முறைப்பாடுகளை முதலமைச்சர் கேட்டறிந்த நிலையில், அவை தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

மாணவரின் முறைப்பாடுகளை முதலமைச்சர் கேட்டறிந்த நிலையில், அவை தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை
Related recommendation
Hiru TV News | Programmes