General21 July 2026

சாம்சங் அறிமுகப்படுத்திய புதிய "கேலக்ஸி கார்ட்" கிரெடிட் அட்டை சேவை!

உலகின் முன்னணி இலத்திரனியல் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான சாம்சங் (Samsung), தனது புதிய கிரெடிட் அட்டை சேவையான ‘கேலக்ஸி கார்ட்’ (Galaxy Card)-ஐ அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சேவையின் மூலம், சாம்சங் அதிகாரபூர்வ தளத்தில் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் வரை ரிவார்ட்ஸ் (Rewards) வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓடிடி (OTT) தள சேவைகள் உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்கும் 2 சதவீதம் வரை ரிவார்ட்ஸ் மற்றும் பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் கொடுப்பனவு அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய கிரெடிட் அட்டை சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes