வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்ட நாணயக் கடன் கடிதங்களின் சராசரி மதிப்பு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
எனினும், கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதன் பின்னர் இந்த நிலைமையில் பெருமளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜூலை 20ஆம் திகதி 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், ஜூலை 21ஆம் திகதி 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மாத்திரமே நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கூடுதல் தீர்வை வரி அமுலுக்கு வந்த மே மாதம் 15ஆம் திகதியன்று மாத்திரம் 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என அவர் சுட்டிக்காட்டினார்.

Latest News
லங்கா பிரீமியர் லீக் போட்டி நிர்ணயம்: விசாரணையில் சர்வதேச பேரவை
Local
25 July 2026
கிழக்கு ஐரோப்பாவில் பரபரப்பு: எல்லை மீறிய ரஷ்ய ஆளில்லா வானூர்தியை சுட்டு வீழ்த்தியது ருமேனியா!
Local
25 July 2026
அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
Local
25 July 2026
மஹாபொல நிதியத்தின் முக்கிய அறிவிப்பு
Local
25 July 2026
வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரம்: படையினர்,தீவிரவாதிகள் 27பேர் உயிரிழப்பு
Local
25 July 2026
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களில் பதிவிடத் தடை செய்ய முன்மொழிவு!
Local
25 July 2026
ஹூ_தி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் மீது சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் தாக்குதல்
Local
25 July 2026
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பதவிக்காலம் நீடிப்பு
Local
25 July 2026
பாலியல் குற்றச்சாட்டு: பிரதம வழக்குத் தொடுநரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நீக்கியது!
Local
25 July 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ. 110 மில்லியன் மதிப்புள்ள கொக்கெய்னுடன் 79 வயது ஸ்பெயின் நாட்டுப் பயணி கைது!
Local
25 July 2026