சூரியன் எப்.எம். வானொலி இன்று (25) தனது 28ஆவது அகவையைக் கொண்டாடுகிறது.
ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெய்னோ சில்வாவின் (Rayynor Silva) வழிநடத்தலில், 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி இலங்கையின் வானொலி வரலாற்றில் புதிய புரட்சியைத் தொடங்கிய சூரியன் எப்.எம்., இன்றுவரை மக்கள் மனங்களில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளது.
செய்திகள், பொழுதுபோக்கு, சமூகப் பணிகள் மற்றும் நேயர்களுடனான நெருக்கமான உறவு ஆகியவற்றின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் இதயங்களில் சூரியன் வானொலி தனக்கென தனிவொரு இடத்தை நிலைநிறுத்தியுள்ளது.
நிகழ்ச்சிப் பிரிவு, செய்திப் பிரிவு, இணையச் செய்திப் பிரிவு, திட்டமிடல் மற்றும் விரிவாக்கல் பிரிவு எனச் சூரியனின் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் அர்ப்பணிப்புமிக்க குழுவினரின் உழைப்பே இந்த வெற்றிப் பயணத்தின் முக்கிய தூணாக விளங்குகிறது.
1998ஆம் ஆண்டு சூரியன் வானொலி ஆரம்பிக்கப்பட்டபோது, 3 நிமிடங்களாக ஒலிபரப்பப்பட்டு வந்த பிரதான செய்திகள், நாளடைவில் 10 நிமிடங்களாகவும், பின்னர் 15 நிமிடங்களாகவும் நீடிக்கப்பட்டன.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய போர்க்காலத்தில் மக்களின் துன்பத்துயரங்களை வெளிக்கொணர்ந்த செய்திகளின் ஊடாக, மக்கள் மனதில் சூரியன் செய்திகள் நீங்காத இடத்தைப் பிடித்தன.
அத்தகைய கடினமான யுத்த சூழ்நிலையிலும் தமிழ் பேசும் மக்களுக்காக உண்மையாகவும் துணிவுடனும் அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றியமை குறித்துச் சூரியன் செய்திப் பிரிவு இன்றும் பெருமிதம் கொள்கிறது.
வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் மலையக மக்களின் பல்வேறு நிகழ்வுகளையும் பிரச்சினைகளையும் வெளிக்கொணர்வதன் மூலம், அவர்களின் குடும்ப வானொலியாகச் சூரியன் எப்.எம். பரிணமித்துள்ளது.
சூரியன் செய்திகளின் ஊடாக நாடு முழுவதும் உள்ள பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் பிராந்தியச் செய்தியாளர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இதில், சூரியன் செய்திகளுக்காகப் பணியாற்றிப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பிராந்திய முன்னாள் செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் உள்ளிட்ட செய்தியாளர்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் இந்த நாளில் நினைவுகூர்வது பொருத்தமானதாகும்.
அதேவேளை, சூரியன் எப்.எம். இன் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு நேயர்களாகிய பொதுமக்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பே முதன்மையான காரணமாகும்.
எனவே, இந்தத் தொடர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நேயர்களுக்கும் சூரியன் செய்திப் பிரிவு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
Latest News
பட்லருக்கு ரோகித் கொடுத்த மறக்க முடியாத அன்புப் பரிசு: இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பதிவு!
Local
25 July 2026
ஒரே வீட்டில் 20 ஆண்டுகள் மௌனம் - பின்னணியை அறிந்து அதிர்ந்த ஊடகங்கள்
Local
25 July 2026
நீட் போராட்ட மேடையில் சர்ச்சை! எதிர்ப்பால் வெளியேறிய நடிகை சனம் ஷெட்டி
Local
25 July 2026
இலங்கையில் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட இருவர் இராமேஸ்வரத்தில் கைது
Local
25 July 2026
சீன நாட்டவரின் மரணம் : சீன நாட்டவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
25 July 2026
28ஆவது அகவையை கொண்டாடும் சூரியன் எப் எம் வானொலி
Local
25 July 2026
ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!
Local
25 July 2026
லங்கா பிரீமியர் லீக் போட்டி நிர்ணயம்: விசாரணையில் சர்வதேச பேரவை
Local
25 July 2026
கிழக்கு ஐரோப்பாவில் பரபரப்பு: எல்லை மீறிய ரஷ்ய ஆளில்லா வானூர்தியை சுட்டு வீழ்த்தியது ருமேனியா!
Local
25 July 2026
அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
Local
25 July 2026