கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 20 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஹஷீஷ்' போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற 27 வயதுடைய கனடா நாட்டவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 201.89 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓவியராக பணிபுரியும் குறித்த சந்தேகநபர், கனடாவின் ரொறன்ரோவிலிருந்து கட்டார் நாட்டின் தோஹா வழியாக கட்டார் ஏர்வேஸ் QR662 எனும் வானூர்தி சேவையின் மூலம் இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, பயணப் பொதிகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 பழுப்பு நிறக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
சோதனையின் முடிவில் இவை அனைத்தும் 'ஹஷீஷ்' போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டதுடன், அவற்றின் மொத்த நிறை 20.117 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Latest News
64 வெளிநாட்டுப் புறாக்கள் கடத்தல் - கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் இருவர் கைது!
Local
26 July 2026
பிரபாஸின் 'ஸ்பிரிட்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு திரையுலகில் கத்ரீனா கைப்?
Local
26 July 2026
சீனாவில் மரபணு திருத்த சோதனையில் 6 வயது சிறுமி பலி; உண்மையை மறைத்த விஞ்ஞானி!
Local
26 July 2026
இந்திய அணியில் புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு? – அஸ்வின் கருத்து!
Local
26 July 2026
ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' திரைப்பட வெளியீடு எப்போது?
Local
26 July 2026
மலத்திலிருந்து மருந்து : இங்கிலாந்தில் புதிய மருத்துவச் சாதனை!
Local
26 July 2026
உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின் முதன்முறையாக வெளியே வந்த மெஸ்ஸி!
Local
26 July 2026
நிதி பற்றிய குழுவின் அறிக்கை உண்மையை மூடிமறைக்கிறது - ஐ.தே.க சாடல்
Local
26 July 2026
சி.எஸ்.கேவில் இணைகிறாரா ஹர்திக் பாண்டியா?
Local
26 July 2026
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சஜித்துக்கு அழைப்பு!
Local
26 July 2026