இரண்டாம் உலகப் போரின்போது, அடோல்ப் ஹிட்லரின் நாசிசப் படைகளை எதிர்த்துப் போராடி பிரான்சை மீட்பதற்காக 1944 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி நேச நாட்டுப் படைகள் தரையிறங்கிய நோர்மாண்டி (Normandy) D-Day கடற்கரைகள், யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுனெஸ்கோ தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கடற்கரைகள் 1944ஆம் ஆண்டு நிகழ்வுகளாலும் அவற்றின் அழியாத நினைவுகளாலும் உருவான "விதிவிலக்கான கலாசார நிலப்பரப்பாகும்" எனவும், அதனாலேயே இது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது, 1944 ஜூன் 6 ஆம் திகதி நாசி ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்சை மீட்க நேச நாட்டுப் படைகள் நோர்மாண்டி கடற்கரை வழியாக மேற்கொண்ட மாபெரும் கடல்வழித் தாக்குதலின் தொடக்க நாளே 'D-Day' என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும், நினைவுகூரல் நிகழ்வுகள் இந்த கடற்கரைய வழக்கமாக இடம்பெறுகின்றன.
இந்தத் தரையிறக்க நடவடிக்கையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பெல்ஜியம், நோர்வே, போலந்து, லக்ஸம்பேர்க், கிரேக்கம், செக்கோஸ்லோவாக்கியா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.
இவர்களில் 177 பிரான்ஸ் நாட்டு கொமாண்டோ வீரர்களும் அடங்குவர்.
நாசி ஜேர்மனியிடமிருந்து ஐரோப்பாவை விடுவிப்பதில் இந்தத் தாக்குதல் ஒரு தீர்க்கமான கட்டமாக அமைந்தது.
ஒட்டுமொத்தமாக 156,115 நேச நாட்டுத் துருப்புகள் கடல் வழியாக (யூட்டா, ஒமாஹா, கோல்ட், ஜூனோ மற்றும் ஸ்வேர்ட் எனப் பெயரிடப்பட்ட கடற்கரைகளில்) தரையிறங்கி, தாக்குதலில் ஈடுபட்டன.

Latest News
ஆடிவேல் உற்சவம் - பொதுமக்கள், சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்
Local
27 July 2026
நீதவான்கள், நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி!
Local
27 July 2026
LPL ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு: ஜஃப்னா கிங்ஸ் அணி இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!
Local
27 July 2026
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
Local
27 July 2026
தெய்வேந்திரமுனை விஷ்ணு ஊர்வல காவடி ஆட்டத்துக்கு அனுமதி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!
Local
27 July 2026
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரச பணி நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவு!
Local
27 July 2026
அமெரிக்க ஈரான் தாக்குதல்கள் இடைநிறுத்தம்: உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது!
Local
27 July 2026
சட்டவிரோத வாகனப் பதிவு நடவடிக்கை: மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் அதிகாரி கைது
Local
27 July 2026
நாட்டின் பல பகுதிகளுக்கும் கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை!
Local
27 July 2026
இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா நடைமுறை மீண்டும் அமுல்!
Local
27 July 2026