General29 July 2026

"கொளத்தூர் தொகுதியில் தோல்வி!" – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனைக்கு அதிரடி உத்தரவிட்ட ஸ்டாலின்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு வெற்றி வாய்ப்பினைத் தவறவிட்டார்.

கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தமை அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, கொளத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு மற்றும் விவிபாட் (VVPAT) கருவிகளைப் சோதனை செய்வதற்குத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தேர்தல் முடிவுகள் வெளியான ஏழு நாட்களுக்குள் போட்டியிட்ட வேட்பாளர் கோரிக்கையை முன்வைக்கலாம்.

அதன் அடிப்படையில், மு.க. ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பரிசோதனை செய்யும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes