இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளை இலக்குவைத்துச் இணையவழி ஊடுருவல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அபாயங்கள் காணப்படுவதாக, நாடாளுமன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த செயற்பாட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவினால் (SLCERT) நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டறிக்கையை மேற்கோள் காட்டி இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் சைபர் பாதுகாப்பு தொடர்பில் 56 பகுதிகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், அதில் 46 பகுதிகள் மிக உயர் மட்ட அபாயக் காரணியைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனுமதி பெறப்படாமல் டிஜிட்டல் அமைப்புகளுக்குள் பிரவேசித்தல், உணர்திறன் மிக்கத் தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்துதல் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளங்களை ஊடுருவிச் சிதைப்பதன் மூலம் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல் போன்ற தீங்கிழைக்கும் ஆபத்துகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
எனவே, இந்தப் பாதுகாப்புப் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் உடனடி அவதானம் செலுத்தி, உரிய தீர்வுகளை முன்னெடுக்குமாறு கணக்காய்வுப் பரிசீலனையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் 2025 ஆண்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Latest News
கடவத்தையில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மூவர் கைது!
Local
31 July 2026
உணவுப் பணவீக்கம் கணிசமாக உயர்வு: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தகவல்!
Local
31 July 2026
இணையத்தைக் கலக்கும் சூரியின் மண்டாடி!
Local
31 July 2026
இந்தியாவில் ஹொலிவுட் சாதனையைத் தகர்த்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ! - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Local
31 July 2026
ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை
Local
31 July 2026
நேஷன் லங்கா ஃபைனான்ஸ் வைப்பாளர்களுக்கான இழப்பீடு: இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
Local
31 July 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
Local
31 July 2026
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு
Local
31 July 2026
விற்பனையை உயர்த்த ஊழியர் முகத்தில் கிறீம் பூசி சித்திரவதை
Local
31 July 2026
புதிய அவதாரம் எடுக்கும் ராய் லட்சுமி – நடிகையாக அல்ல
Local
31 July 2026