General31 July 2026

தீவிரமடையும் டெங்கு பரவல் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

இந்த ஆண்டில் இலங்கையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 84 ,724 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், நோய்த்தொற்றின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை அதிகளவான மாதாந்த பாதிப்பு ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.

ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,350 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் ஜூன் மாதத்தில் 21, 533 தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.

மேல் மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதியாக பதிவாகியுள்ளதுடன், அங்கு 44 ,829 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியாக கம்பஹா மாவட்டத்தில் 17, 971 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 16,814 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கண்டி மாவட்டத்தில் 5,782 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,626 பேரும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மாகாணங்களின் அடிப்படையில், தென் மாகாணத்தில் 17, 378 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 9,110 பேரும், மத்திய மாகாணத்தில்7, 136 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, 175 மருத்துவ அதிகாரி பிரிவுகள் தற்போது அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு சராசரியாக 2, 391 புதிய தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும் தேசிய டெங்கு தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes