பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கில்கிட் பகுதியில் அமைந்துள்ள, உலகின் 12வது உயரமான சிகரமான பிராட் பீக்கில் (Broad Peak) ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன 10 மலையேற்ற வீரர்களைத் தேடும் பணியின் போது, நான்கு பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கில்கிட் சுற்றுலாத்துறை அமைச்சரும் அந்த பகுதியின் காவல்துறையினரும் நான்கு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவற்றில் இருவரின் உடலங்களை அடையாள காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகப் புகழ்பெற்ற நேபாள நாட்டின் மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா (Nirmal Purja) உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர், நேற்று (30) மதிய வேளையில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இந்தக் குழுவில் 6 நேபாள நாட்டினரும், அமெரிக்கா, சீனா, ஓமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர் என வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் கடந்த 2019ஆம் ஆண்டில் ஆறு மாத காலத்திற்குள் உலகின் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட 14 சிகரங்களையும் ஏறி உலக சாதனை படைத்த நிர்மல் புர்ஜாவின் நிலை குறித்து இதுவரை எந்த வித தகவலும் வெளியாகவில்லை.
Latest News
மஹர சிறைச்சாலை மோதல் - மறுவாழ்வுப் பிரிவு உட்பட பல கட்டடங்கள் பலத்த சேதம்!
Local
02 August 2026
ஹர்திக் பாண்டியாவிற்காக போட்டிபோடும் 3 அணிகள் : தக்க வைக்கப்போவது யார்?
Local
02 August 2026
ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் திடீர் திருப்பம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
Local
02 August 2026
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
Local
02 August 2026
43 வயதிலும் குறையாத அழகு: நடிகை அனிதா ஹாசினந்தானியின் புகைப்படங்கள் வைரல்!
Local
02 August 2026
தடைசெய்ய முடியாத வசூல் மழை : 10 நாட்களில் மாபெரும் சாதனை படைத்த 'ஜனநாயகன்'
Local
02 August 2026
ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்வதற்கு ஒப்புதல் - இஸ்ரேலும் இணைந்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
02 August 2026
மஹர சிறைச்சாலை அமைதியின்மை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
Local
02 August 2026
கண்ணை நம்ப முடியாத அதிசயம் : பல ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் திருமணம்!
Local
02 August 2026
தாக்குதலை ஒத்திவைக்க ஈரான் கோரிக்கை - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
02 August 2026