இலங்கைக்கு மட்டுமே உரித்தான அரிய வகை சிறுத்தைகளைப் பாதுகாக்கும் தேசிய முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், 'இலங்கை சிறுத்தை தினம் 2026 என்ற நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடத்தவுள்ளார்.
இன்றைய தினம் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொழும்பு 7, சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நிபுணர்கள், சூழலியலாளர்கள், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரச நிறுவனப் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
கண்ணி வலைகள், நஞ்சூட்டப்படுதல் மற்றும் மனித-வனவிலங்கு மோதல்கள் காரணமாக இலங்கை சிறுத்தைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு அறிவியல் ரீதியான தீர்வுகளைக் காண்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இலங்கை சிறுத்தைகளைப் பாதுகாப்பது என்பது வெறும் வனவிலங்கு பாதுகாப்பு சார்ந்த விஷயம் மட்டுமல்ல் அது நாட்டின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கும், இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்குமான தேசியப் பொறுப்பாகும்.
இந்தநிலையில், இலங்கையின் சிறுத்தை இனத்தைப் பாதுகாக்க, அரசு, தனியார் துறை, தூதரகங்கள் மற்றும் ஊடகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
Latest News
ஆகஸ்ட் 4 நள்ளிரவு முதல் க.பொ.த உயர்தர பரீட்சை தனியார் வகுப்புகளுக்குத் தடை!
Local
01 August 2026
தலையில் ஊசி குத்தப்பட்ட நிலையிலும் பிரியாணி சாப்பிட்ட சல்மான் கான்!
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை அமைதியின்மை - காயமடைந்த கைதிகள் 4 பேர் மருத்துமனையில்!
Local
01 August 2026
இரத்மாலனையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு
Local
01 August 2026
இன்று இரவு பல பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
01 August 2026
மஹர சிறைச்சாலையில் பதற்றம் - வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
Local
01 August 2026
ருமேஷ் தரங்கவுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது
Local
01 August 2026
எந்தவொரு நபருக்கும் அநீதி இழைக்கவில்லை; இது எனது முன்பிறவியின் பயன்- தீர்ப்பின் பின்னர் பூஜித்
Local
01 August 2026
சீதைக்குப் பின்னால் ஒரு தேவதை: இணையத்தில் வைரலாகும் அடையாளம் தெரியாத பெண்!
Local
01 August 2026
தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கையின் ஜஸ்வர் உமர் தெரிவு!
Local
01 August 2026