ஈழத் தமிழர்களின் விவகாரங்களைக் கையாள்வதற்காக, தமிழ் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தரப்புகளை உள்ளடக்கிய ஒரு சிறப்புக் குழுவை உருவாக்குமாறு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கோரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்தநிலையில், ஈழத் தமிழர் விவகாரங்களைக் கையாள்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் கருத்தை உள்வாங்கி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்ததாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இதேவேளை செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பாகவும், தமிழர்களுக்கு எதிரான அநீதிக்குரிய சர்வதேச குற்றவியல் விசாரணை குறித்தும் விசேடமாக வலியுறுத்தப்பட்டது.
மேலும் ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை வைத்து முரண்பாடின்றி சமூக மட்டத்தில் தீர்ப்பதற்கான களம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்கக் கோரப்பட்டதுடன் ஈழத் தமிழர்களின் அகதிகள் பிரச்சினை மற்றும் அது தொடர்பான குறைபாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
Latest News
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை - வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய செய்தி!
Local
02 August 2026
மகன் சஞ்சய்க்கு விஜய் கொடுத்த அந்த ஒரு அறிவுரை!
Local
02 August 2026
பாகிஸ்தான் வீராங்கனையை கட்டியணைத்த ஜெமிமா - அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!
Local
02 August 2026
சிறைச்சாலை மோதல்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் - நாமல் குற்றச்சாட்டு!
Local
02 August 2026
பெருவில் சுற்றுலா வானூர்தி விபத்து - 13 பேர் உயிரிழப்பு
Local
02 August 2026
வேதனை தந்த இரசாயனக் கழிவு நீர் - மொட்டை ராஜேந்திரனின் பின்னணியில் உள்ள சோகக் கதை
Local
02 August 2026
பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் விஜய்
Local
02 August 2026
ஈரானிய நாணயத்தை அழிக்கிறேன் - ட்ரம்பின் அதிரடிப் பதிவு
Local
02 August 2026
2030இல் இலங்கை எட்டப்போகும் இலக்கு - அரசாங்கத்தின் மெகா திட்டம்
Local
02 August 2026
தோனியுடன் தீவிர பயிற்சி - இலங்கைத் தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்
Local
02 August 2026