நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்று வரும் சிறைச்சாலை மோதல்கள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சில வார இடைவெளியில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய சிறைச்சாலை மோதல் இதுவென சுட்டிக்காட்டியுள்ள அவர், இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமல்ல என்றும், மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் சீரழிந்து வரும் சிறைச்சாலை அமைப்பின் வெளிப்பாடு என்றும் விமர்சித்துள்ளார்.
சிறைச்சாலைத் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையிலும், இதுவரை நிரந்தர ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதுகாப்பை அதிகரிப்பது தற்காலிகத் தீர்வாக மட்டுமே அமையும் எனத் தெரிவித்துள்ள அவர், அதிகளவிலான கைதிகள், போதிய வசதியின்மை, சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் புனர்வாழ்வு திட்டமின்மை ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிறைத்தண்டனை ஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிக்கிறதே தவிர, அவர்களின் கண்ணியத்தை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச, தற்காலிக நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, சீரழிந்து வரும் சிறைச்சாலை அமைப்பைச் சீரமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
அடுத்த 48 மணி நேரத்திற்குள் பாரிய வெள்ள அபாயம்: பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவசர எச்சரிக்கை!
Local
03 August 2026
திருவண்ணாமலையில் மகன்களுடன் தனுஷ் : 'ஓம்' படப்பிடிப்பிற்கு இடையே நடந்தது என்ன?
Local
03 August 2026
கண்டி - கடுகன்னாவ வீதி தற்காலிகமாக மூடல்
Local
03 August 2026
மஹர சிறைச்சாலை மோதல் - நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளுக்கு பலத்த பாதுகாப்பு!
Local
03 August 2026
ரசிகர்களிடையே அதிகரித்த எதிர்பார்ப்பு : சொந்த குடும்பத்திற்காக படத்தை திரையிட்ட ரவி மோகன் - வைரலாகும் பதிவு!
Local
03 August 2026
டிக்கோயா ஆறு பெருக்கெடுத்துள்ளதால் பல வீடுகள் நீரில் மூழ்கின!
Local
03 August 2026
களனி கங்கை தாழ்நிலப் பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி நேரம் நீடிப்பு
Local
03 August 2026
யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
Local
03 August 2026
ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலையொன்றுக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு!
Local
03 August 2026
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி!
Local
03 August 2026