பங்களாதேஷில் 13 வயது சிறுமி ஒருவர், தனது 7 மாத குழந்தையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
தகவல்களின்படி, குறித்த சிறுமி 11 வயதாக இருந்தபோது, சமூக வலைத்தளமான முகப்புத்தகம் (Facebook) மூலம் 22 வயதுடைய நபருடன் அறிமுகமானதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த அறிமுகம் திருமணமாக மாறியதாகவும், திருமணமான ஓராண்டுக்குப் பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குழந்தை பிறந்த சில காலத்திலேயே, சிறுமியை அவரது கணவரும் மாமியாரும் வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
அப்போது, தனது பச்சிளம் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தனது குழந்தையை மீண்டும் பெறும் நோக்கில் சிறுமி சட்டரீதியான உதவியை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குழந்தையை தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், 7 மாத குழந்தை மீண்டும் தனது தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம், குழந்தைத் திருமணத்தின் பாதிப்புகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.
Latest News
போதைப்பொருள் கட்டுப்பாடே சிறைச்சாலை மோதல்களுக்கு காரணமா? - நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளக்கம்!
Local
02 August 2026
காவல் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி: பெண் சாஜண்ட் கைது!
Local
02 August 2026
சீரற்ற வானிலையால் 5 கடற்றொழிலாளர்கள் பலி; ஒருவரை காணவில்லை!
Local
02 August 2026
131 டெஸ்ட் போட்டிகள், 184 இன்னிங்ஸ்கள்: ஒருமுறை கூட ரன்-அவுட் ஆகாத கபில் தேவின் அசாத்திய சாதனை!
Local
02 August 2026
பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலைக் கைதிகளைப் பார்வையிட வியாழக்கிழமை முதல் மீண்டும் அனுமதி!
Local
02 August 2026
மீண்டும் களத்தில் லியோனல் மெஸ்ஸி - கைநழுவிய வெற்றி
Local
02 August 2026
ஹர்திக் பாண்டியா அணி மாற்றம்? வெளியான அதிரடி தகவல்!
Local
02 August 2026
“பூஜித் ஜயசுந்தரவை நியமிக்க வேண்டுமென அநுரவே கோரினார்”
Local
02 August 2026
15 நாட்களுக்கு முன் நடந்த ரகசியம் வெளிவந்தது : விஜய் மகனை இழுத்துப் பேசிய ரவி மோகனின் மாமியார்!
Local
02 August 2026