General02 August 2026

மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்!

மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸ்ஸ, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், மஹர சிறைச்சாலை கைதிகளைப் பார்வையிடுவதற்கான நேரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குப் (4) பின்னரே பார்வையாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes