நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்டோரின் கோரிக்கைக்கு அமைவாகவே, பூஜித் ஜயசுந்தர காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டதாகத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நல்லாட்சி காலத்தில் காணப்பட்ட ஊழல் ஒழிப்புக்குழுவில் அங்கம் வகித்திருந்த அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலர், ஊழல் ஒழிப்புப் பணிகளைத் திறம்பட முன்னெடுக்க பூஜித் ஜயசுந்தரவையே காவல்துறை மா அதிபராக நியமிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டு, முடியுமாயின் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பூஜித் ஜயசுந்தர காவல்துறை மா அதிபராகப் பதவியேற்ற பின்னர், ஜே.வி.பியின் மே தினக் கூட்டத்திற்குச் சென்று நேரடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டதாகச் சுட்டிக்காட்டிய விமல் வீரவங்ச, அவர்களுக்கு இடையே நெருங்கிய அரசியல் தொடர்பு நிலவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஏறிப் பிரசாரம் செய்ததன் மூலம் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்குப் பூரண அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளது.
எனினும், பூஜித் ஜயசுந்தர அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாததால் அத்தகைய பாதுகாப்பு எதுவுமே அவருக்குக் கிடைக்கவில்லை என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டினார்.

Latest News
சீரற்ற வானிலை - நுவரெலியா, ஹட்டன் வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
Local
03 August 2026
பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இணையும் ஆகிப் நபி
Local
03 August 2026
ஐரோப்பிய மலைத்தொடரில் வரலாற்று சாதனை: அல்ட்ரா மரதனில் உலக சாதனை படைத்த சோஃபி வூட்ஸ்!
Local
03 August 2026
அதிகரிக்கும் வெப்பநிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!
Local
03 August 2026
ஹோர்முஸ் நீரிணைக்கான புதிய கடல் வழிப்பாதை: ஈரான் - ஓமான் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில்!
Local
03 August 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா பறிமுதல்: இராமநாதபுரத்தில் 3 பேர் கைது!
Local
03 August 2026
கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது உலங்கு வானூர்திகள் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு!
Local
03 August 2026
கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத்தீயால் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்: ஆகஸ்டிலும் தொடரும் என எச்சரிக்கை !
Local
03 August 2026
போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை
Local
03 August 2026
உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்: பேராதனை தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ள அரிய காட்சி!
Local
03 August 2026