General03 August 2026

நாவலப்பிட்டி - கினிகத்தேனை வீதியில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது!

மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கும் அபாயம் காரணமாக நாவலப்பிட்டி - கினிகத்தேனை வீதி, வலப்பிட்டிய பகுதியில் தற்காலிகமாக மூடப்படுகிறது.

இன்று (3) மாலை 6.30 முதல் மறு அறிவித்தல் வரை குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படுவதாக நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, அந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes