கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா நோய்த்தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,700 ஐக் கடந்துள்ளது.
மே 15 ஆம் திகதி இந்த நோய்த்தாக்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 3,802 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,707 பேர் உயிரிழந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் மிக வேகமாகப் பரவும் இந்த எபோலா பரவலுக்கு அரிய வகை 'புண்டிபுகியோ' வைரஸே காரணமாகும்.
இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லாத நிலையில், பரிசோதனை நிலையிலுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைப் பயன்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிழக்கு இதுரி மாகாணத்திலேயே 90 சதவீதமான பாதிப்புகள் பதிவாகியுள்ள போதிலும், கிசாங்கனி நகரம் உட்பட மேலும் 5 மாகாணங்களுக்கும் தொற்று பரவியுள்ளது.
இதுவரை 100 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயுதக் குழுக்களின் வன்முறைகள், நிதியுதவிப் பற்றாக்குறை மற்றும் கொடுப்பனவு நிலுவைகள் காரணமான சுகாதாரப் பணியாளர்களின் போராட்டங்கள் என்பன நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன.
Latest News
தமிழக பாதீடு அறிக்கை தாக்கலில் ஜெபமாலை : அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பிய விவாதம்!
Local
06 August 2026
தனது பெயர் மற்றும் உருவத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய பிரபல நடிகை!
Local
06 August 2026
சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
06 August 2026
மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்து!
Local
06 August 2026
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்: ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம்!
Local
06 August 2026
மெக்சிகோவில் டிக்டொக் பிரபலம் நேரலையில் துப்பாக்கிச் சூட்டில் பலி!
Local
06 August 2026
அநுராதபுரத்தில் ஒரேயொரு தமிழ் பாடசாலையின் காணியை பாதுகாக்க பெரும் போராட்டம்!
Local
06 August 2026
புத்தாண்டு அழகி போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய பெண் உட்பட இருவருக்கு அபராதம்!
Local
06 August 2026
சொந்த படையின் தாக்குதலை எதிரி என நினைத்து ஏவுகணையை ஏவியது இஸ்ரேல்!
Local
06 August 2026
‘TM App’ செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக அறிவிப்பு: பட்டியலை புதுப்பித்தது இலங்கை மத்திய வங்கி!
Local
06 August 2026