International05 August 2026

அதிரடியாக குறைந்த எண்ணெய் விலை : ட்ரம்பின் முக்கிய அறிவிப்பால் வந்த மாற்றம்!

உலக சந்தையில் இன்று மசகு எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு பதிவாகியுள்ளது.

இதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 80 அமெரிக்க டொலருக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.

சந்தை நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 79.20 அமெரிக்க டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 75.40 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு எட்டப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் விநியோகத் தடைகள் குறித்த அச்சம் தணிந்ததால் இந்த விலைச் சரிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிசக்தி விநியோகம் சீராகும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes