General05 August 2026

முன்னாள் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு விசாரணையின் நிமித்தம், அழைக்கப்பட்டிருந்த அகிலவிராஜ் காரியவசம், கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, முன்னாள் கல்வி அமைச்சரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியில் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Related recommendation
Hiru TV News | Programmes