அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் டெங்கு நோயை முழுமையாக ஒழிப்பதை இலக்காகக் கொண்டு, திட்டமிடப்பட்ட தேசிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதிக அவதானமிக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தற்போதைய டெங்கு நிலைமையை மீளாய்வு செய்வதற்கும், நுளம்பு கட்டுப்பாட்டு திட்டங்களை வலுப்படுத்துவதற்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று (5) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முந்தைய டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைபாடுகளை அடையாளம் காணுதல், அதிக அவதானமிக்க பகுதிகளைக் கண்டறிதல், கூட்டு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல், தொழில்நுட்ப ஆதரவை விரிவுபடுத்துதல், சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் டெங்கு தொடர்பான மரணங்களைக் குறைத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.
அண்மை காலமாக டெங்கு மரணங்கள் குறைந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை எனக் குறிப்பிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையும் காலங்களிலும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டம் வரை கட்டமைக்கப்பட்ட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, டெங்கு அபாயம் தொடர்ந்தபோதிலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,300 இலிருந்து 350 முதல் 400 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் (4) வரை இலங்கையில் மொத்தம் 87,536 டெங்கு நோயாளர்களும் 63 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் மழைக்காலம் மற்றும் வானிலை மாற்றத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Latest News
வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் 7 மணிநேரம் நீர் விநியோகம் தடை
Local
06 August 2026
விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
06 August 2026
ஜேசன் சஞ்சய்யின் நேர்காணலுக்கு சங்கீதா போட்ட நிபந்தனை : அனைவரையும் வியக்க வைத்த சம்பவம்!
Local
06 August 2026
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்
Local
06 August 2026
அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் ஷாருக் கான்? படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்
Local
06 August 2026
800 பச்சை குத்தல்களால் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையும் கிடைக்கவில்லையா? : தாய் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்!
Local
06 August 2026
'உறங்கும் பெண்மணி' தோற்றம் : உலகைக் கவரும் அபூர்வ இயற்கை மலைத்தொடர்!
Local
06 August 2026
அதிவேக வீதிகளில் 'L' பலகை பொருத்தப்பட்ட வாகனங்களுக்குத் தடை - காவல்துறை எச்சரிக்கை
Local
06 August 2026
மருத்துவ உலகின் மறுபக்கத்தை பேசும் ‘செய் செய்யாதே’ – சிறப்புத் தோற்றத்தில் எச். ராஜா
Local
06 August 2026
ஆகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையில் மாற்றமில்லை
Local
06 August 2026