இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர் (Indian-Origin Tamil – IOT) அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு நேற்று (5) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் (India House) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது மலையக தமிழர் சமூகத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் மற்றும் இந்திய அரசின் பல்வேறு அபிவிருத்தி முன்முயற்சிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள், கடந்த ஏப்ரல் மாதம் இந்திய துணை ஜனாதிபதி மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் 'டிட்வா' புயலால் மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இந்திய அரசால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள்கட்டமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான விடயங்களை இந்திய வெளியுறவுச் செயலாளருடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.
அத்துடன் காணி உரிமை மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீரற்ற காலநிலை காரணமாக வட்டவளை, அகரப்பத்தனை, நாவலப்பிட்டி உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் தாமதமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

Latest News
மக்கள் பிரதிநிதிகளின்சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த சட்டத் திருத்தம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
Local
06 August 2026
சைபர் பாதுகாப்பு சோதனையில் அதிர்ச்சி: AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் என்ன நடக்கும்? மெட்டா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
06 August 2026
சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
Local
06 August 2026
இலங்கை தேயிலைக்கு பலத்த வரவேற்பு - ஜூலை ஏலத்தில் விலை அதிரடியாக அதிகரிப்பு
Local
06 August 2026
தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி : இன்று மீண்டும் அதிகரித்தது தங்க விலை!
Local
06 August 2026
பல்கலைக்கழக சேர்க்கைக்கான பதிவுகள் ஆரம்பம் - மேன்முறையீடுகளுக்கு ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை அவகாசம்
Local
06 August 2026
திருகோணமலையில் குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Local
06 August 2026
குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!
Local
06 August 2026
நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்களின் படகு விபத்து - மீட்பு நடவடிக்கையில் கடற்படை
Local
06 August 2026
தமிழக பாதீடு அறிக்கை தாக்கலில் ஜெபமாலை : அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பிய விவாதம்!
Local
06 August 2026