General06 August 2026

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளை நிறைவு

2026ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) நிறைவடைகிறது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் செப்டம்பர் 2ஆம் திகதி நிறைவடையும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 4ஆம் திகதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes