General07 August 2026

சிறைச்சாலைப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்தல்!

சிறைச்சாலைகளில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அல்லது நீதி அமைச்சர் நாடாளுமன்றத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

நேற்றைய தினம் (06) மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒரு மரணமும், குருவிட்ட சிறைச்சாலையில் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையிலும் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்துப் நாடாளுமன்றத்திற்குத் தெளிவுபடுத்துவது அவசியமானது என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes