General08 August 2026

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனங்கள் உயர்த்தப்படவில்லை: எரிபொருள் கொடுப்பனவே திருத்தப்பட்டது – பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர விளக்கமளிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை வேதனங்கள் உயர்த்தப்படவில்லை.

மாறாக,தற்போதைய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு திருத்தியமைக்கப்பட்டமையினால், அவர்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் காரணமாக, எரிபொருள் கொடுப்பனவைப் பெறும் அனைத்து அரச அதிகாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருத்தப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு மூலம் இந்த அதிகரிப்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes