லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் காலி கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கெலன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் சார்பில் கமில் மிஷார அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் காலி அணியின் சார்பில் சரித் அசலங்க மற்றும் ஈஷான் மலிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தநிலையில் 124 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி 15.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதற்கமைய 2026ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் காலி கெலன்ட்ஸ் அணி கிண்ணத்தைத் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026
பாலஸ்தீனத்தில் அத்துமீறிய குடியேற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபடும் இஸ்ரேல்!
Local
14 August 2026
நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசாங்கம் எவ்வித ஆபத்தையும் எடுக்கக்கூடாது : ரஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டு!
Local
14 August 2026
சவுதி இளவரசர் - அமெரிக்க CENTCOM தளபதி சந்திப்பு: பிராந்திய பதற்றத்தை தணிக்கை செய்வது குறித்து ஆலோசனை!
Local
14 August 2026
ஓமான் அருகே எண்ணெய் கசிவு: கெஷ்ம் தீவு கடலோரத்தில் மாசுபாடு என ஈரான் தகவல்!
Local
14 August 2026
யேமனின் பொப் அல்-மந்தப் அமைவிடப் பகுதியில் ஹூதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்!
Local
14 August 2026
5.3 வினாடிகளில் 800 கி.மீ வேகம்: சீன அதிவேக தொடருந்தின் சாதனை!
Local
14 August 2026
இலங்கை கடற்படையால் கைதான 9 தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
Local
14 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நிறைவு!
Local
14 August 2026