General09 August 2026

2027 ஒருநாள் உலகக் கிண்ணம் - நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இனி நடைபெறவுள்ள தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே குறித்த அணியால் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தற்போது ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் நேரடித் தகுதியைப் பெறுவது கடினம் எனக் கூறப்படுகிறது.

1975 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடர்ச்சியாக 3ஆவது முறையாகத் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு தகுதிச்சுற்று மூலம் உலகக் கிண்ணத்துக்குத் தெரிவான அந்த அணி, 2023ஆம் ஆண்டு தகுதிச்சுற்றில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை முற்றிலும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes