இலங்கையிலுள்ள ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து 'ஸீரோ க்ளிக்' (Zero-click) வகையிலான புதிய இணையவழி தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழுவுக்கு (SLCERT) முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு போலி இணைப்புகளையும் (Links) சொடுக்காத நிலையிலும் அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாத நிலையிலும், அவர்களின் வட்ஸ்அப் கணக்குகளை இணைய ஊடுருவிகள் (Hackers) தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் இந்தத் தாக்குதல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய iOS பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களே இந்தத் தாக்குதலினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், இலங்கையின் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்த பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஊடுருவப்பட்ட வட்ஸ்அப் கணக்குகள் மூலம் மற்றவர்களுக்குப் பணமனுப்புமாறு கோரி போலிச் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
iOS 16.7.12 க்கும் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஐபோன் பயனர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க ஐபோன் பயனர்கள் உடனடியாகத் தமது தொலைபேசிகளின் iOS பதிப்பையும், வட்ஸ்அப் செயலியையும் அண்மைய பதிப்புக்கு புதுப்பிக்குமாறு (Update) இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், வட்ஸ்அப் கணக்குகளில் இருபடிச் சரிபார்ப்பு (Two-Step Verification) மற்றும் 'செட் லாக்' (Chat Lock) ஆகிய பாதுகாப்பு அம்சங்களை உடனடியாகச் செயற்படுத்துமாறும், தெரிந்த நபர்களிடம் இருந்து பணக் கோரிக்கைகள் வந்தால் தொலைபேசி அழைப்பு மூலம் அதனை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Latest News
2026 உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
Local
13 August 2026
மனிதர்களின் மனநிலையை துல்லியமாக அறியும் நாய்கள்: வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்!
Local
13 August 2026
விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தைப் படம்பிடித்த நாசா வீராங்கனை ஜெசிகா மெய்ர்!விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தைப் படம்பிடித்த நாசா வீராங்கனை ஜெசிகா மெய்ர்!
Local
13 August 2026
செம்மணி புதைகுழியில் தொடரும் அதிர்ச்சி: 4 சிறார்கள் உட்பட 10 மனித என்புக்கூடுகள் அகழ்வு!
Local
13 August 2026
டொக்சிக் திரைப்பட விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நயன்தாரா: சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த புதிய தோற்றம்!
Local
13 August 2026
93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
Local
13 August 2026
வத்தளை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் - இந்தியாவில் கைதான இரு சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
13 August 2026
பெறுமதி சேர் வரியை செலுத்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் - தவறும் பட்சத்தில் அபராதம்!
Local
13 August 2026
அவுஸ்திரேலியாவில் 7.5 இலட்சத்துக்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!
Local
13 August 2026
எல் நினோ தாக்கம் - 2027 ஆம் ஆண்டு வரை வறட்சி தீவிரமடையும் அபாயம்!
Local
13 August 2026