புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத்தல் பரிசோதனையிலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி குறித்த வானூர்தி நடுவானில் பயணித்த போது, திடீரென சுமார் 300 அடிகள் வரை கீழே இறங்கி பலத்த குலுக்கலுக்கு உள்ளானது.
இதனால் விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமானிகளுக்கு முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் குறித்த முதன்மை விமானியின் மாதிரி சந்தேகத்திற்குரியதாக அமைந்திருந்தது.
ஆய்வகத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட உறுதிப்படுத்தல் பரிசோதனையில், விமானி கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து வானூர்தி போக்குவரத்து பணிப்பாய்வுச் செயலகத்தின் விதிமுறைகளின்படி, குறித்த விமானி உடனடியாகப் பணிப் பொறுப்புகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
Latest News
அத்துருகிரியவில் துப்பாக்கிச்சூடு: உணவக உரிமையாளர் படுகாயம்!
Local
17 August 2026
பல்லேகலை சிறைச்சாலையில் பரபரப்பு: ஆசனவாயில் 'ஐஸ்' போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த கைதி சிக்கினார்!
Local
17 August 2026
கின்னஸ் சான்றளித்த உலகின் மிக உயரமான 10 பெண்களின் பட்டியல் வெளியீடு!
Local
17 August 2026
முப்படை ஆராய்ச்சி அமைப்புகளையும் இணைத்து ஒரே தேசிய மையம்: ஜனாதிபதி யோசனை!
Local
17 August 2026
விரைவில் இலங்கை மக்கள் விருப்பமான வாகனங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்: விஜித ஹேரத் உறுதி!
Local
17 August 2026
ஆண்டின் இறுதிக்குள் 'எல் நினோ' தீவிரமடைய 90% வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
17 August 2026
1 பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல்
Local
17 August 2026
கடந்த 16 நாட்களில் 6,900க்கும் அதிகமானோருக்கு டெங்கு: கம்பஹாவில் உச்சகட்ட அச்சுறுத்தல்!
Local
17 August 2026
உட்பூசல்களாலேயே வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை இழந்ததாக குற்றச்சாட்டு!
Local
17 August 2026
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!
Local
17 August 2026