இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி
இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, களப் பயிற்சிகளுக்கு மத்தியில் இந்திய வீரர்கள் சந்தோசமாக தமது நேரத்தைக் கழித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சக வீரரான சர்ஃபராஸ் கானுக்கு சிகையலங்கார நிபுணராக மாறி முடி வெட்டிவிடும் சுவாரசியமான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இலங்கையின் பிரபல சிகையலங்கார நிபுணரான சதுரங்கவின் வரவேற்பகத்திற்குச் சென்ற சிராஜ், அங்கிருந்த கருவியின் மூலம், நகைச்சுவையாகச் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டத் தொடங்கினார். பின்னர் குறித்த சிகையலங்கார நிபுணர் சர்ஃபராஸ{க்கு முறையான சிகையலங்காரத்தை செய்து முடித்தார்.
இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, 19 மாதங்களுக்குப் பிறகு சர்ஃபராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024 நவம்பருக்குப் பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படாத சர்ஃபராஸ் கான், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்டும் புறக்கணிக்கப்பட்டதால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களாகத் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடல் எடையைக் குறைத்து உடல்தகுதியை மேம்படுத்தியுள்ள சர்ஃபராஸ் கான், தனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அணியில் தனது இடத்தை உறுதி செய்யத் தீவிரமாகப் பயிற்சி பெற்று வருகிறார் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
Latest News
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026
பாலஸ்தீனத்தில் அத்துமீறிய குடியேற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபடும் இஸ்ரேல்!
Local
14 August 2026
நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசாங்கம் எவ்வித ஆபத்தையும் எடுக்கக்கூடாது : ரஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டு!
Local
14 August 2026
சவுதி இளவரசர் - அமெரிக்க CENTCOM தளபதி சந்திப்பு: பிராந்திய பதற்றத்தை தணிக்கை செய்வது குறித்து ஆலோசனை!
Local
14 August 2026
ஓமான் அருகே எண்ணெய் கசிவு: கெஷ்ம் தீவு கடலோரத்தில் மாசுபாடு என ஈரான் தகவல்!
Local
14 August 2026
யேமனின் பொப் அல்-மந்தப் அமைவிடப் பகுதியில் ஹூதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்!
Local
14 August 2026
5.3 வினாடிகளில் 800 கி.மீ வேகம்: சீன அதிவேக தொடருந்தின் சாதனை!
Local
14 August 2026
இலங்கை கடற்படையால் கைதான 9 தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
Local
14 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நிறைவு!
Local
14 August 2026