நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான தீர்மானம் எந்தவொரு தனிநபரையோ அல்லது குழுவையோ இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டதல்ல என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாறாக, நாட்டின் பொதுநலனை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நீதித்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்துள்ளார்.
நீதியை நிலைநாட்டும் செயற்பாடு நீதிமன்றங்களால் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசாரணைகள், வழக்குத் தாக்கல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சட்ட மாஅதிபர் திணைக்களம், கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு, இலங்கை காவல்துறை மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் மனிதவளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் இலகுவாக அணுகக்கூடிய வகையில் அதன் நடவடிக்கைகளை மாகாண மட்டத்திலும் முன்னெடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மக்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடித்தல் உள்ளிட்ட விடயங்களில் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான தீர்மானம் குறித்து மேலும் ஆராய்ந்து, பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவது பொருத்தமானது என அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்தச் சீர்திருத்தங்கள் நாட்டின் நீதித்துறை எதிர்கொள்ளும் கட்டமைப்புசார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பரந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும் எனவும், இது தனது தனிப்பட்ட கருத்தோ அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட நிலைப்பாடோ அல்ல எனவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
ஹட்டன் - கொழும்பு வீதி திடீர் மூடல்! குயில்வத்தையில் மண் சரிவு!
Local
15 August 2026
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! – ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுப்பு, இலங்கைக்கு ஆபத்தில்லை!
Local
15 August 2026
"மனம் நிறைந்துள்ளது..." – ரசிகர்களின் பெரும் வரவேற்பால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
15 August 2026
முன்னணி பாதாள குழு தலைவர் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
Local
15 August 2026
தினசரி குறைந்தளவு உடற்பயிற்சியும் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளும்
Local
15 August 2026
வெள்ளை மாளிகையின் பிரமாண்ட நிர்மாணிப்புக்கு அனுமதிக் கோரி உயர்நீதிமன்றை நாடிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்
Local
15 August 2026
ஆசிய கால்பந்து கூட்டமைப்புக்குள் பிளவு?
Local
15 August 2026
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!
Local
14 August 2026
மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய புத்தகங்கள் காகிதக் கூழாக இந்தியாவிற்கு ஏற்றுமதி: காவல்துறையின் அதிரடி விசாரணை!
Local
14 August 2026
பால்வெளிக்கு அப்பால் அரிய நட்சத்திரம்: விண்வெளி ஆய்வில் வெளியான பிரபஞ்ச விசித்திரம்!
Local
14 August 2026