கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 23 ஆம் திகதி மிகவும் சுபயோக நாளாகக் கருதப்படுவதால், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் இங்கு திருமணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
அதிக அளவிலான கூட்ட நெரிசலைச் சமாளிக்க, வழக்கமான நேரத்திற்கு மாறாக அதிகாலை 4 மணிக்கே திருமணச் சடங்குகளைத் தொடங்க ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளததோடு ஆலயத்தில் பிரத்தியேகமாக 6 திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டு, கூடுதல் பணியாளர்களும் பாதுகாப்புப் படையினரும் நியமிக்கப்படவுள்ளனர்.
அதேவேளை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒரு திருமணக் குழுவில் மணமகன், மணமகள் மற்றும் படப்பிடிப்பாளர் உட்பட மொத்தம் 24 நபர்களுக்கு மட்டுமே மண்டபத்துக்கு அருகில் அனுமதி அளிக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி ஒரே நாளில் 334 திருமணங்கள் நடைபெற்றமையே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள திருமணங்கள் மூலம் அந்தப் பழைய சாதனை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
நுவரெலியா உந்துருளி பந்தயத்தில் விபத்து: காயமடைந்த இரு போட்டியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Local
16 August 2026
‘கருப்பு’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்தது ‘விஸ்வநாத் & சன்ஸ்’: இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை!
Local
16 August 2026
நுவரெலியா மாவட்ட நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க கணக்காய்வு குழு: ஜனாதிபதி நடவடிக்கை!
Local
16 August 2026
அதிக வெப்பத்தால் அசம்பாவிதங்கள் நேரலாம்: பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!
Local
16 August 2026
த்ரிஷா வீட்டில் உள்ள பொருள் விஜய்யினுடையதா? வைரலாகும் நிழற்படம்!
Local
16 August 2026
டெங்கு பாதிப்பு: இலங்கையில் 92,000 ஐ கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை!
Local
16 August 2026
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது பங்களாதேஷ் அணி!
Local
16 August 2026
கொத்துக்கொத்தாக இறந்து மிதக்கும் மீன்கள் : வாழ்வாதாரம் இழந்து கடற்றொழிலாளர்கள் சோகம் - பின்னணியில் நடப்பது என்ன?
Local
16 August 2026
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்த இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்!
Local
16 August 2026
நயினாரின் கருத்தை கண்டித்துள்ளார் நடிகை குஷ்பு!
Local
16 August 2026