உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன.
இந்தநிலையில் எதிர்த்தரப்பு விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைகளில் முக்கிய திருப்பமாக, முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சி விசாரணைகள் மூவரடங்கிய கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் நிறைவடைந்தன.
நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில் சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பில், 2023 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் இதுவரை மொத்தம் 547 சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2076 வழக்குச் சான்றுகளும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளிடம் எதிர்த்தரப்பு வாக்குமூலங்களைக் கோருவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்த்தரப்பு விசாரணைகளை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2017 நவம்பர் 01 முதல் 2019 ஏப்ரல் 21 வரை அனுராதபுரம், மாவனெல்ல, கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, காத்தான்குடி, கொழும்பு, தெஹிவளை போன்ற இடங்களில், சஹ்ரான் ஹாசீம் மற்றும் மரணித்த ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பி, ஆயுதப் பயிற்சி பெற்று, சதித் திட்டங்களை தீட்டி தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை என்பது முதன்மை குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராக வாய்மொழி மூலமான குற்றச்சாட்டு விபரங்களை கோருவதற்குப் போதுமான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் திருப்தி தெரிவித்தது.
இந்தநிலையில், நீதிமன்றத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மூலம் சந்தேகநபர்களுக்குத் தமிழில் விளக்கிக் கூறப்பட்டன.
Latest News
மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய புத்தகங்கள் காகிதக் கூழாக இந்தியாவிற்கு ஏற்றுமதி: காவல்துறையின் அதிரடி விசாரணை!
Local
14 August 2026
பால்வெளிக்கு அப்பால் அரிய நட்சத்திரம்: விண்வெளி ஆய்வில் வெளியான பிரபஞ்ச விசித்திரம்!
Local
14 August 2026
சூரிய கிரகணத்தின்போது திருமணத்துக்கு சம்மதம் கோரிய காதலன்
Local
14 August 2026
வாகன இறக்குமதி வரி: 50% மேலதிகக் கட்டணம் டிசம்பர் 31 வரை நீடிப்பு!
Local
14 August 2026
துபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பசிக் இன்று நாட்டுக்கு
Local
14 August 2026
இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர் - அட்டவணை மாற்றம் குறித்து பரிசீலனை!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Local
14 August 2026
தென்னிந்திய சினிமாவையே ஆக்கிரமிக்கும் சாய் அபயங்கர்! கைவசம் உள்ள முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்கள்
Local
14 August 2026
"மண்டபத்திற்குள் விருந்தாளியாக நுழைந்த முதலை!" - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!
Local
14 August 2026
இலங்கை - இந்திய டெஸ்ட் தொடருக்கான செம்பியன் கிண்ணம் அறிமுகம்!
Local
14 August 2026