சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பான தகவல்களை இரகசியமாகத் திரட்டி வந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் சஹஸ்புர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், அண்மையில்; புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி ஒருவரின்; நெருங்கிய நண்பர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தெஹிவளை வட்டரப்பள வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் சந்தேகநபரின் உந்துருளியை செலுத்தியவரே தற்;போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
அத்துடன், புதிய மெகசின் சிறைச்சாலை மோதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே இவர் பிணையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள "கொஸ் மல்லி" எனப்படும் பாதாள உலகக் குழுத் தலைவருடனும் சந்தேகநபருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபரின் கைப்பேசியை சோதனையிட்ட காவல்துறையினர், அவருக்கும் "கொஸ் மல்லி"க்கும் இடையிலான பல தொலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
அந்த உரையாடல்களில் சிறைச்சாலை அதிகாரிகள் பற்றித் திரட்டப்பட்ட தகவல்களும், அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்த உரையாடல்களும் அடங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Latest News
ரஷ்யா - யுக்ரைன் இடையே தீவிரமடைந்துள்ள வான்வழித் தாக்குதல்கள்: இரு தரப்பிலும் தலா 7 பேர் பலி!
Local
16 August 2026
எல் நினோ தாக்கத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
Local
16 August 2026
தேசிய பூங்காக்களில் நெரிசலைக் குறைக்கவும் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் சஜித் யோசனை!
Local
16 August 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்து 10 பேர் மீட்பு!
Local
16 August 2026
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு சரிவு; பொருளாதார எதிர்பார்ப்புகளும் வீழ்ச்சி!
Local
16 August 2026
பல நூறாண்டுகள் மாறாத மரபு : நல்லூரை வந்தடைந்தது கொடிச்சீலை.
Local
16 August 2026
2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 460/9
Local
16 August 2026
நுவரெலியா உந்துருளி பந்தயத்தில் விபத்து: காயமடைந்த இரு போட்டியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Local
16 August 2026
‘கருப்பு’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்தது ‘விஸ்வநாத் & சன்ஸ்’: இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை!
Local
16 August 2026
நுவரெலியா மாவட்ட நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க கணக்காய்வு குழு: ஜனாதிபதி நடவடிக்கை!
Local
16 August 2026