கடந்த ஆறு ஆண்டுகளில் நாட்டின் சிறைச்சாலைகளில் இருந்தோ அல்லது சிறைக் காவலில் இருந்தோ மொத்தம் 1,181 கைதிகள் தப்பியோடியுள்ளதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 472 பேர் மட்டுமே பின்னர் மீளக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 709 கைதிகள் தங்களது தண்டனைக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் இதுவரை கைது செய்யப்படாது தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் காணப்படுவது தொடர்பிலும் கணக்காய்வாளர் அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டின் 22 சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது 5,083 கைத்தொலைபேசிகள், 4,149 சிம் அட்டைகள் மற்றும் 2,432 மின்கலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தப்பியோடிய கைதிகள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதும், சிறைச்சாலைகளுக்குள் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் தடையின்றி கிடைப்பதும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என கணக்காய்வாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
சிறைச்சாலைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதுடன், தப்பியோடிய கைதிகளை விரைவாகக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும், சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட வேண்டியதன் அவசியமும் இதன்மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Latest News
முதலாவது டெஸ்ட்டில் வெற்றிபெற இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் இலக்கு!
Local
18 August 2026
'பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல்' சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
Local
18 August 2026
22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல்!
Local
18 August 2026
இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு
Local
18 August 2026
"விஜய்க்காக 16 பாடல்கள் கொண்ட சிறப்பு ஆல்பம்" சாய் அபயங்கர் நெகிழ்ச்சி
Local
18 August 2026
தள்ளிப்போகும் "சிக்மா" திரைப்பட வெளியீடு: புதிய திகதி அறிவிப்பு
Local
18 August 2026
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
Local
18 August 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜுக்கு பிணை!
Local
18 August 2026
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
Local
18 August 2026
பிலிப்பைன்ஸ் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு - இரு மாணவர்கள் பலி!
Local
18 August 2026