இலங்கையில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு ஈழத் தமிழர்களின் தாயகம், தேசியம் மற்றும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு கையளிக்கப்பட்ட 15 அம்ச பிரகடனத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதியின் ஓலம் - 02, போராட்டத்தின் நிறைவாக நேற்று மாலை ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்ப்பாண கிளை அலுவலகத்தில் குறித்த பிரகடனம் கையளிக்கப்பட்டது.
அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்றும் “நீதியின் ஓலம்” பிரகடனம் மூலம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கையெழுத்துப் போராட்டத்தின் ஊடாக, ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் மீண்டும் சர்வதேச கவனத்திற்கு கொண்டுவரப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விஹாரைகளுக்குள்ளும் கடந்தகாலங்களில் தமிழர்களுக்கு எதிரான அநீதி இழைக்கப்பட்டிருக்கலாம் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
எனவே, தமிழர்களுக்கு எதிரான அநீதி இழைக்கப்பட்டமைக்கு காரணமான குற்றவாளிகளை பாதுகாக்கும் அரணாக வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவமுகாம்களையும், விகாரைகளையும் பயன்படுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதியின் ஓலம் - போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
Latest News
கண்டியில் மதுபானக் கடைகள் 10 நாட்களுக்கு மூடல்
Local
19 August 2026
அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: அஜித், தனுஷ் இணைய விருப்பம்
Local
19 August 2026
அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கை – சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய வழிகாட்டல்
Local
19 August 2026
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்
Local
19 August 2026
காலி டெஸ்டில் மனோதத்துவ ஆட்டம்: ஜெய்ஸ்வாலின் தூண்டிலில் சிக்கி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த திக்வெல்ல!
Local
19 August 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிதல் கட்டாயம் - செப்டம்பர் 19ஆம் திகதியுடன் சலுகைக்காலம் நிறைவு
Local
19 August 2026
இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது இலங்கை!
Local
19 August 2026
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழப்பு
Local
19 August 2026
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
19 August 2026
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு
Local
19 August 2026