General18 August 2026

இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, சிறைச்சாலையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற உயர்மட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு மருத்துவச் சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes