2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கட்டாரில் உயிரிழந்த இலங்கைச் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நஷ்டஈடாக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் தூதரகம் மொத்தம் 80,886,895.32 இலங்கை ரூபாவை மரண நஷ்டஈடாக மீட்டுள்ளது.
இந்த மொத்தத் தொகையில், தூதரகத்தின் முயற்சியால் 13,229,128 இலங்கை ரூபா நேரடியாக சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 67,657,767.32 இலங்கை ரூபாய் உரிய பயன்பெறுநர்களுக்கு வழங்குவதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் கையளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்குகளின் நஷ்டஈட்டுத் தொகைகளும் இதில் அடங்குகின்றன.
கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் சிதாரா கான் மற்றும் அமைச்சர் தர்மசிரி விஜேவர்தன ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, கட்டார் அதிகாரிகள் மற்றும் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றும் சட்ட நிறுவனம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த நஷ்டஈட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதேவேளை, தூதரகம் 2025ஆம் ஆண்டில் மொத்தம் 197,719,710.36 இலங்கை ரூபாவை நஷ்டஈடாக மீட்டு, இலங்கையிலுள்ள வாரிசுகளுக்கு அத்தொகை வழங்கப்பட வழிவகை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை!
Local
20 August 2026
அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!
Local
20 August 2026
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை ஆடைப் பிரச்சினை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர்!
Local
20 August 2026
மீண்டும் இலங்கையில் வங்குரோத்தா? ரணில்- கம்மன்பில கூற்றுக்கு பதில் வழங்கியுள்ள அனில் ஜயந்த
Local
20 August 2026
22க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
Local
20 August 2026
22 ஆவது திருத்தம்: நீதிமன்றம் தீர்மானித்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
20 August 2026
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில்!
Local
20 August 2026
நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகள் என்ன செய்ய வேண்டும் என அரசாங்கம் விளக்கம் - சிக்கல்களை நீக்க கோருகிறார் சாணக்கியன்
Local
20 August 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: அடுத்த மாதம் சோதனையோட்டம் ஆரம்பம்!
Local
20 August 2026
கல்கிசை துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் கைது
Local
19 August 2026