வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
வாடகை வாகன ஓட்டுநர்கள் அல்லது வாகன சேவைகளில் உதவி புரிபவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் குறித்துத் தகவல்கள் கிடைத்துள்ளதை அடுத்து இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளதாகக் காவல் ஊடகப் பேச்சாளர், எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்,பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், வாகனம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாகனத்தின் பதிவு எண், ரகம் மற்றும் ஓட்டுநரின் பெயரைச் சரிபார்க்க வேண்டும்.
குறிப்பாக இரவில் பயணிப்போர், தங்களது தொலைபேசி அல்லது கூகுள் வரைபடம் மூலம் தங்களது நேரலை இருப்பிடத்தைக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இலக்கை அடையும் வரை அவர்கள் உங்களைக் கண்காணிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இரவு நேரப் பயணங்களின் போது, ஓட்டுநர் அறிமுகமில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது எதிர்பார்க்காத பாதைகளில் செல்ல முயன்றால் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பயணத்தின் போது முகம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரைக் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது.
மயக்க மருந்து கலந்த உணவுகளைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் புரிவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பயணத்தின் போது பணம், மடிக்கணினி, கைத்தொலைபேசி மற்றும் நகைகள் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களைப் பிறருக்குத் தெரியும் வகையில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பயணத்தின் போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அச்சுறுத்தலை உணர்ந்தாலோ, உடனடியாகக் காவல்துறையின் அவசர உதவி எண்களான 119 அல்லது அவசர தகவல் சேவையான 118 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு, வாகனம் மற்றும் சம்பவம் குறித்த விபரங்களை வழங்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வாகன ஓட்டுநர்களுக்கும் பொருந்தும் என நினைவூட்டியுள்ள காவல்துறை, பயணிகளை அழைத்துச் செல்லும்போது முறையான நடத்தைப் விதிகளைப் பின்பற்றுமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
டெய்லி மெயில் நிறுவனத்திற்கு 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளைச் செலுத்த இளவரசர் ஹரிக்கு நீதிமன்றம் உத்தரவு
Local
21 August 2026
வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை அன்னாசிப்பழங்கள்!
Local
21 August 2026
இஞ்சி அழுகல் நோய் அச்சுறுத்தல்: ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
21 August 2026
எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!
Local
21 August 2026
மகாத்மா காந்தியின் தனிப்பட்ட சிந்தனைகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்றில் புதிய சாதனை!
Local
21 August 2026
வளையாபதி முதல் பத்மஸ்ரீ விருது வரை: காலம் கடந்து சாதனை படைத்த சௌகார் ஜானகி
Local
21 August 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் கடைசி உரை எனவும் அறிவிப்பு
Local
21 August 2026
அது வெறுப்பல்ல.. மகிழ்ச்சியான கேலி": இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விளக்கம்
Local
21 August 2026
எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு - நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்
Local
21 August 2026
2026 இறுதிக்குள் 9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அடைய முடியும் – நிதி பிரதி அமைச்சர்
Local
21 August 2026