கிளிநொச்சி, பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த போலிச் செய்தியாளர் சந்திப்பை பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என்பவர் நடத்தியதாக விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விசாரணைகளின்படி, சந்தேகநபரிடம் இரண்டு போலி அடையாள அட்டைகள் காணப்பட்டதுடன், அவர் ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், நிதி மோசடி உள்ளிட்ட மூன்று குற்றவியல் வழக்குகளில் அவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தம்மை மருத்துவராக அடையாளப்படுத்திக் கொண்டு அவர் பல்வேறு நபர்களை ஏமாற்றி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
அத்துடன், சந்தேகநபர் முன்னர் சில அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளதாகவும், அந்த நியமனங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அங்கு விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். குறித்த இடம் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலப்பகுதி மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.
இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் சந்தேகநபர் திட்டமிட்டு பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
குறித்த பகுதியில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் பதிவாகவில்லை எனத் தெரிவித்த அவர், இனவாதத்தைத் தூண்டும் அல்லது பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் உறுதியளித்தார்.
இதனிடையே, குறித்த பகுதி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம், முட்கொம்பன் பகுதியில் அமைந்துள்ள அரச காணி என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலம் 1919ஆம் ஆண்டு வனப்பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அரச காணி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தியாகராசா குலதீபன் என்பவரால் குறித்த காணியில் கற்றாழை மற்றும் காய்கறிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் மூன்று மாடிக் கட்டடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் குறித்த காணியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரம் அரச காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பானதே அன்றி, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பானது அல்ல எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
Latest News
வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை அன்னாசிப்பழங்கள்!
Local
21 August 2026
இஞ்சி அழுகல் நோய் அச்சுறுத்தல்: ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
21 August 2026
எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!
Local
21 August 2026
மகாத்மா காந்தியின் தனிப்பட்ட சிந்தனைகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்றில் புதிய சாதனை!
Local
21 August 2026
வளையாபதி முதல் பத்மஸ்ரீ விருது வரை: காலம் கடந்து சாதனை படைத்த சௌகார் ஜானகி
Local
21 August 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் கடைசி உரை எனவும் அறிவிப்பு
Local
21 August 2026
அது வெறுப்பல்ல.. மகிழ்ச்சியான கேலி": இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விளக்கம்
Local
21 August 2026
எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு - நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்
Local
21 August 2026
2026 இறுதிக்குள் 9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அடைய முடியும் – நிதி பிரதி அமைச்சர்
Local
21 August 2026
இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுநராக ஹஷான் திலகரத்ன நியமனம்
Local
21 August 2026