அதிகாரம் கைவசம் இருக்கும் போது அதனால் தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த பின்னரே தமது தவறுகள் குறித்து சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தாங்கள் தவறு செய்தால், அதனைத் தவறு என ஏற்றுக்கொண்டு உணரக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்கள் எனக் குறிப்பிட்ட ரோகித்த அபேகுணவர்தன, ஆளும் தரப்பில் உள்ள பிரதி அமைச்சர் ஒருவர் தமது கருத்தை கவனமாகக் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
“அதிகாரம் கைவசம் இருக்கும் போது தலைக்கனம் அதிகரிக்கிறது. அதிகாரம் கையை விட்டுச் செல்லும்போதுதான், ‘நமக்கு என்ன நடந்தது?’ எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. அதிகாரம் இருக்கும் இடத்தில் புத்தி இருப்பதில்லை, புத்தி வரும் போது கையில் அதிகாரம் இருப்பதில்லை” என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஆட்சியில் இருப்பவர்களிடம் உண்மையைச் சொன்னால், சாரைப்பாம்பு மீது மண்ணெண்ணெய் ஊற்றியது போல துடிக்கின்றார்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தற்போது ஆளும் தரப்பினரிடம் அதிகாரம் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அதிகாரமும் நாடாளுமன்ற ஆசனங்களும் இல்லாத நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்து மக்களுடன் பயணித்த அனுபவம் தங்களுக்கு இருப்பதாகவும் ரோகித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் காணப்படும் வரிச்சுமை தொடர்பிலும் அவர் அரசாங்கத்தை விமர்சித்தார்.
உண்மையைச் சுட்டிக்காட்டும்போது அரசாங்கத் தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக எதிர்வினையாற்றுவதாகக் குறிப்பிட்ட அவர், சாதாரண மக்களும் அதிகரித்துள்ள வரிச்சுமையால் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண விருந்துக்காக விடுதிக்குச் சென்று உணவருந்தும்போது, அந்த உணவிற்கும் 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வியாபாரிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் செலுத்திய வரியை மீளப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்பட்டாலும், சாதாரண நுகர்வோருக்கு அவ்வாறான வாய்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், வரிச்சுமையின் தாக்கம் நேரடியாக சாதாரண மக்களையே பாதிப்பதாகத் தெரிவித்த ரோகித்த அபேகுணவர்தன, நகைச்சுவை கலந்த விமர்சனத் தொனியில், திருமண விருந்துக்குச் சென்றுவிட்டு பின்னர் விவாகரத்து செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
Latest News
பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து: தொடரிலும் முன்னிலை
Local
22 August 2026
'தி சைக்கிள் ஒஃப் லவ்'- திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா
Local
22 August 2026
மூடப்பட்ட குடியேற்றத் தி;ட்டத்தை திறந்த இஸ்ரேல்: உச்சக்கட்ட பதற்றத்தில் பாலஸ்தீனர்கள்;
Local
22 August 2026
மருத்துவ பரிசோதனையின் பின்னர் இம்ரான் கான், மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்
Local
22 August 2026
வீரர்-வீராங்கனைகளுக்கு வெப்பத்துக்கு எதிரான பாதுகாப்பை வலியுறுத்தும் தென்கொரியா
Local
22 August 2026
உலக கிண்ணத்தில் இடம்பெற்ற அத்துமீறல்கள்: ஆர்ஜன்டீனாவுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அபராதம்
Local
22 August 2026
ஸ்வீடன் பாடசாலை ஒன்றில் வாள் தாக்குதல்: பலர் காயம்
Local
22 August 2026
யுக்ரைன்- ரஷ்ய போர்: அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்புகள்
Local
22 August 2026
பாலஸ்தீன எக்சன் அமைப்பினர் பயங்கரவாதிகள் அல்லர்: தீர்ப்பு வெளியானது
Local
22 August 2026
டெய்லி மெயில் நிறுவனத்திற்கு 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளைச் செலுத்த இளவரசர் ஹரிக்கு நீதிமன்றம் உத்தரவு
Local
21 August 2026