General21 August 2026

யாழில் வாணவேடிக்கை : கண் பாதிக்கப்பட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதி

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது வாணவேடிக்கைகாக பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளினால் வெளியாகிய புகை மற்றும் லேசர் கதிர்களால், கண் பாதிக்கப்பட்ட சுமார் 150 பேர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சுமார் 40 பேர் சிறார்கள் என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் பாரியளவான கண் பாதிப்புகள் எவருக்கும் ஏற்படவில்லை என மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes