International21 August 2026

டெய்லி மெயில் நிறுவனத்திற்கு 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளைச் செலுத்த இளவரசர் ஹரிக்கு நீதிமன்றம் உத்தரவு

தனியுரிமை மீறல் வழக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, இளவரசர் ஹரி உள்ளிட்ட ஏழு முக்கியப் பிரமுகர்கள் 'டெய்லி மெயில்' பத்திரிகையின் வெளியீட்டாளரான ஏ.என்.எல் (ANL) நிறுவனத்திற்கு முதற்கட்டமாக 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளை ஆகஸ்ட் 28 ஆம் திகதிக்குள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.என்.எல் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட தனியுரிமை மீறல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தொகை முதற்கட்ட நஷ்டஈடாகச் செலுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes