பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் "மருத்துவ ரீதியாக நலமாக உள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்.
கண் மருத்துவர், இதய மருத்துவர் மற்றும் ஒரு பொது மருத்துவர் உள்ளிட்ட "தகுதிவாய்ந்த மருத்துவர்கள் குழு" கானைப் பரிசோதித்ததாக பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார் கூறியுள்ளார்.
அவரது உடல்நிலை குறித்த முறைப்பாடுகளை தொடர்ந்து, 48 மணி நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களால் பரிசோதிக்க வேண்டும் என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டிருந்தது.
எனினும் இறுதியில் அவர் அரசு மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
2023-ல் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, நீதிமன்றங்களிடமிருந்து கான் பெற்ற மிக முக்கியமான நிவாரணம் தற்போதைய தலையீடு மாத்திரமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது மட்டுமல்லாமல், பல மாதங்களாக அவரால் சந்திக்க முடியாத அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அவரது சகோதரி நொரீன் கான் சிறையில் அவரைச் சந்தித்தார்.
அவரது மற்றொரு சகோதரியான உஸ்மா கான், நேற்று இரவு மருத்துவமனைக்குச் சென்றபோது அவருடன் சென்றிருந்தார்.
வியாழக்கிழமை இரவு முழுவதும் நடந்த மருத்துவப் பரிசோதனையின் அனைத்து நிலைகளிலும் அவர் உடனிருந்தார் என்று தாரார் கூறினார்.
வியாழக்கிழமை இரவு முழுவதும் நடந்த மருத்துவப் பரிசோதனையின் அனைத்து நிலைகளிலும் அவர் உடனிருந்தார் என்று தாரார் கூறினார்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கான் இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு அனுப்பப்படவிருந்தார்.
எனினும், கான் அங்கு அழைத்துச் செல்லப்படவில்லை.
அதற்குப் பதிலாக அரசு நடத்தும் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
அவரது கட்சித் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புச் சூழல்" காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக பாகிஸ்தானிய அரசாங்கம் காரணம் கூறியுள்ளது.
எனினும் இம்ரான் கானுக்கு முழுமையான மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்று அவரின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Latest News
நேபாள வெள்ளப் பேரழிவு: சிட்னி தமிழ் குடும்பம் மாயம்!
Local
02 September 2026
மகளின் பரீட்சை நாளிலேயே உயிரை இழந்த தந்தை: அநுராதபுரத்தில் திடுக்கிடும் சம்பவம்!
Local
01 September 2026
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு
Local
01 September 2026
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை!
Local
01 September 2026
வளைவு அல்ல, முழு வட்டம்: சீனாவின் உயரமான பாலத்தின் கீழ் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அற்புத வானவில்!
Local
01 September 2026
இயக்குநராகும் ரவி மோகன் : இசையமைப்பாளராக களமிறங்கும் கெனிஷா!
Local
01 September 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Local
01 September 2026
செப்டம்பர் 12 பேரணிக்கு அஞ்சி தன்னை சிறையில் அடைக்கத் திட்டம்: நாமல் ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு!
Local
01 September 2026
பிரிந்தாலும் தொடரும் நட்பு : முன்னாள் மனைவி குறித்து ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
01 September 2026
என்னை நீக்கிவிட்டு வேறொருவரை நடிக்க வைத்தார்கள்: ஆரம்பகால அவமானம் குறித்து மனம் திறந்த சூரி!
Local
01 September 2026