General22 August 2026

காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!

காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற (Clearance Certificate) இணையவழி சேவை தற்போது மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தற்காலிக நடைமுறையின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், பிரதான இணையதள முறைமை ஊடாக மீண்டும் விண்ணப்பிக்குமாறு காவல்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, காவல்துறை தடையகற்றல் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட  கோளாறு காரணமாக, குறித்த சான்றிதழுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related recommendation
Hiru TV News | Programmes