பெருந்தோட்டப்பகுதி மக்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்தும் நோக்கில், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் 66,000 மிரிகல் மீன் குஞ்சுகளை விடுவிக்க நுவரெலியா மாவட்ட தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழும், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்க மீனவர் சங்கத்தின் போக்குவரத்து பங்களிப்புடனும், உடவலவ மீன் இனப்பெருக்க மையத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட மிரிகல் மீன் குஞ்சுகளே இவ்வாறு நீர்த்தேக்கத்தில் விடுவிக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீர்த்தேக்கத்தில் விடுவிக்கப்பட்ட இந்த மீன் குஞ்சுகள் 9-10 மாத காலத்தில் 1 - 1 ½ கிலோகிராம் எடையில் வளரும் என்றும், அதன்பின் அதன் அறுவடையை நீர்த்தேக்கத்தின் மீன்பிடியாளர்கள் பெற்றுக்கொள்வர் என்றும் அவர்கள் கூறினர்.
அத்துடன், அவ்வாறு அறுவடை செய்யப்படும் மீன்கள் தோட்டப்பகுதி மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
அந்த பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிகளிலும் நன்னீர் மீன்களுக்கு அதிக தேவை உள்ளதால், இதன் மூலம் நீர்த்தேக்க மீன்பிடியாளர்களின் பொருளாதார நிலையும் உயரும் என்று அலுவலர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Latest News
கோடிகளில் புரண்டாலும் வெளிநாட்டில் காசாளராக வேலை பார்த்த ஜேசன் சஞ்சய் : வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம்!
Local
25 August 2026
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீவிரம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
25 August 2026
தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகள்: முதலமைச்சர் பதிலளிக்காவிட்டால் அபராதம்
Local
25 August 2026
சிறிய குழந்தைகள் கைபேசி பயன்படுத்தினால் கண் பார்வை, பேச்சுத் திறன் பாதிக்கப்படும் என எச்சரிக்கை!
Local
25 August 2026
ஜூனியர் சேவாக்கின் அதிரடி ஆட்டம் – தந்தையின் பாணியை களத்தில் இறக்கிய ஆர்யவீர் சேவாக்
Local
25 August 2026
"காலத்தினாற் செய்த நன்றி!" - பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கும் முதலமைச்சர் விஜய்க்கு கமல் வாழ்த்து!
Local
25 August 2026
ஆட்டமிழந்த பின்னர் எல்லைக் கயிற்றை தாக்கிய இலங்கை வீரர்: பிரபாத் ஜெயசூரியவுக்கு ஐசிசி நடவடிக்கை!
Local
25 August 2026
பஸ் லலித் 72 மணி நேரம் தடுப்புக் காவலில் விசாரிக்கப்படவுள்ளார்
Local
25 August 2026
திரையில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ! விளம்பரமில்லாமல் உதவும் நடிகர் ஆனந்தராஜ்
Local
25 August 2026
கெஹெல்பத்தர பத்மேவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
Local
25 August 2026