அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதியை கனடாப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்த சில மணிநேரங்களிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, கனடாவின் பதிலடி வரி, எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள், காகிதம் மற்றும் மின்னணுப் பொருட்களுக்கே, பதிலடி வரிகள் விதிக்கப்படவுள்ளன.
இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை எட்டப் பல நாட்களாக தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அமெரிக்காவின் நியாயமற்ற நிபந்தனைகளால் உடன்பாடு எட்டப்படவில்லை.
அமெரிக்கா அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதோடு, மிகக் குறைவாகவே வழங்குகிறது என்று சுட்டிக்காட்டிய மார்க் கார்னி, "நாங்கள் தாக்கப்பட்ட பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்; என்று கூறியுள்ளார்.
Latest News
இசையுலகின் 'டெமி கோட்ஸ்' இவர்கள்தான்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!
Local
31 August 2026
இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி
Local
31 August 2026
தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!
Local
31 August 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப்போவதில்லை: வாக்கெடுப்பில் தீர்ப்பை வழங்கிய ஐஸ்லாந்து மக்கள்
Local
31 August 2026
செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்: 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
Local
31 August 2026
நைஜரில் வெடித்த கிளர்ச்சி: நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ராணுவத் தலைமை அறிவிப்பு!
Local
31 August 2026
பணவீக்கம் 89 சதவீதமாக உயர்வு: அமெரிக்க - இஸ்ரேல் போரால் அவதியுறும் ஈரானிய மக்கள்!
Local
31 August 2026
துருக்கியில் இஸ்தான்புல் நகரில் தொடங்கும் முதல் மாநாடு: முப்படை தளபதிகள் பங்கேற்பு!
Local
31 August 2026
கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சிட்னி மரதனில் இஸ்ரேலிய படையினர் பங்கேற்பு
Local
31 August 2026
லங்கா IOC நிறுவனமும் பெட்ரோல் விலைகளை குறைக்கிறது!
Local
30 August 2026