நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக அனுராதபுரம் - நாச்சதூவ குளம் வற்றிப்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அனுராதபுரம் பண்டிகெடுவ பகுதியில் பெருமளவிலான மிளகாய் பயிர்களும், திரப்பனை - மாவத்தவெவ பகுதியில் தர்பூசணி மற்றும் பூசணிப் பயிர்களும் நீரின்றி காய்ந்துபோகும் நிலையை எதிர்நோக்கியுள்ளன.
அதேநேரம், பொலன்னறுவை - ஹிங்குராக்கொட - ரத்மலே பகுதியில் பயிர்கள் அழிவடைந்துள்ளமையால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அங்குள்ள கோனமலயாவ குளமும் வற்றி வருவதால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாத்தளை - வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட லெஹெடீயங்கல கிராமத்தில் வாழும் சுமார் 500 குடும்பங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதுடன், உடனடியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டமொன்றை அமைத்துத் தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அங்கு சில பகுதிகளில் தினமும் 4 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மொனராகலை மாவட்டத்தின் பிபில மற்றும் மெதகம பகுதிகளுக்குப் போத்தல்கள் மற்றும் தாங்கி ஊர்திகள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, மேல், வட மத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Latest News
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் மீது உயிர் அச்சுறுத்தல்: அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை!
Local
26 August 2026
ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கிய ஈரான்!
Local
26 August 2026
$95 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார் பிரைட்டன் வீரர் கார்லோஸ் பலேபா!
Local
26 August 2026
உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த சீனாவின் 'தியாங்கோங் அல்ட்ரா' ரோபோ!
Local
26 August 2026
அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர்: கனடாவின் பதிலடித் தீர்வைகள்
Local
26 August 2026
ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ பதவிக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்
Local
26 August 2026
அமெரிக்க உளவுத் தலைவர் ஜோன் ராட்கிளிஃப் மொஸ்கோவுக்கு திடீர் பயணம்
Local
26 August 2026
நாட்டுப்புற இசை ஆவணம் டொலி பார்டன் காலமானார்
Local
26 August 2026
ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் அமைப்பின் மீது இஸ்ரேலியப் படைகள் அதிரடித் தாக்குதல்!
Local
26 August 2026
தமிழக மக்களின் அரசியல் முடிவு சரியானது - முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் யாஷ் புகழாரம்!
Local
25 August 2026